2 வயது குழந்தை மற்றும் கைக்குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து இளம்பெண் பலி

 


சென்னை ஆவடி சேர்க்காடு பிரதான சாலையை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 22 ). இவரது குழந்தை குழந்தை கவின் (வயது 2).  மற்றொரு குழந்தை ஜஸ்வந்த் (இரண்டு மாதம்) ஆகிய 3 பேரும் ஆவ்டி அருகே ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். இன்று காலை 3 பேரின் பிணங்களையும் ஆவடி ரயில்வே போலீசார் கைப்பற்றியுள்ளனர். உடல்கள் உருக்குலைந்து பார்ப்பதற்கே பரிதாபமாக, படுபயங்கரமாக உள்ளது.


போலீசார் விசாரணையில் விஜயலட்சுமியின் கணவர் பெயர் முத்துமாரி என்பது தெரியவந்துள்ளது.


விசாரணையில் குடும்ப பிரச்சனையா இல்லை வேறு காரணமா என்பது குறித்து ஆவடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


நேற்று இரவு கணவருடன் கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சனை காரணமாக தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி விஜயலட்சுமி குழந்தைகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். எனவே அவர் ரயிலில் குழந்தைகளுடன் பாய்ந்து இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து மேலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.