ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை : ரூ25 கோடி பறிமுதல்

ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையிள் ரூ25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


 


பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதேபோல் பிகில் படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.


மேலும், பிகில் படத்தில் நடித்த விஜய்யிடமும் நெய்வேலியில் நடைபெற்று வந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விசாரணை நடத்தியதோடு சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் ரூ25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.