மோர் தந்த பாட்டிக்கு முதல் மரியாதை தந்த ராஜராஜ சோழன்!

 


வீடியோ இதோ:தஞ்சை கோவில் கட்டுமான பணியின போது, கட்டுமான பணி யிள் ஈடுபட்டவர்களுக்கு இலவசமாக மோர் தந்து தொண்டாற்றிய பாட்டி ஒருவருக்கு கோபுர உச்சியில் பெயர் பொறிக்க செய்து இருக்கிறான் மாமன்னன் இராஜராஜ சோழன்.


எந்த ஒரு அமைப்பும், கட்டிடமும் ஏழு தலைமுறை காலம் எனும் 210 ஆண்டுகள் தாண்டுவது கடினம். 
ஆனால் 1100 ஆண்டுகள் தாண்டி கம்பீரமாக காட்சியளிக்கிறது, தஞ்சை பெரிய கோவில். 216 அடி உயரத்தில் கருவறை மேல் பிரம்மாண்ட கல் கோபுரமும், சுமார் 13அடி உயர சிவ லிங்கமும் அமைய பெற்ற கோவில் இது. முழுமையாக ராஜராஜ சோழனால்்் கட்டப்பட்ட போதும் பல்வேறுு காலகட்டங்களில்பல்வேறு மன்னர்களால் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.


இந்த கோவில் கட்டுமானத்திலேயே,  கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே  சமத்துவம் என்பதை சொல்லால் அல்லாமல் செயலால் செய்து, வரலாற்றை படைத்திருக்கிறான்.


ஆம், 
‘அழகி’ எனும் ஏழை இடையச்சி மூதாட்டி, சிவன் கோவில் கட்டுமான பணியின் போது, கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் இலவசமாக தண்ணீரும், மோரும் வழங்கி தாகம் தனித்தாராம். அவள் செய்த தொண்டின் நினைவாக கோபுர உச்சியில் 80 டன் எடையுள்ள கல்லை நிறுவி, அதில் அழகி என்ற அந்த மூதாட்டியின் பெயரை பொறித்தான் ராஜராஜ சோழன்.எளிமையான அந்த மூதாட்டி செய்த கட்டுமான பணி  சேவை தான், செல்வ சீமான்கள், ராஜராஜர்கள், என அனைவரையும் கடந்து 190 அடி  உயரத்தில், 80 டன் எடையுள்ள கோபுர உச்சி கல்லில் அந்த இடையச்சி மூதாட்டியின் பெயரை இடம்பெற செய்தது.இடையச்சி கல்லை நிறுவி 
எளிமையே வலிமை! என்பதை உணர்த்தும் விதமாக ராஜ ராஜன் தந்த கவுரவத்தின் அடையாளம் தான், ஆண்டுகள் 1000 ஐயும் கடந்து நிற்கும் பெருவுடையார் கோவில்.


இந்த கோவில்  கும்பாபிஷேக விழா இன்று உலகையே திரும்பி பார்க்க செய்யும் வண்ணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமலா சீட் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு என்றும் இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்