கொரோனா பரப்பும் வகையில் செயல்பட்டதாக 30 பேர் மீது வழக்கு பதிவு.

திருப்பூர்: இந்து முன்னணி பிரமுகர் கார் எரிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 30 பேர் மீது கொரோனா பரப்பும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு.
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவ சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட வடக்கு போலீசார் எம்.எஸ் நகரை சேர்ந்த முகமது சேக் தாவூத், அப்துல் அஜீஸ் இருவரை கைது செய்தனர்.


இவர்களை விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 30 பேர் மீது கொரோனா நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.