5 மாவட்டங்களில் அசையக்கூட முடியாது... கொரோனாவின் கோர தாண்டவத்தை சமாளிக்க புது வியூகம்

கொரோனா பரவல் சில மாநகரங்களில் வேகமாக பரவுவதால் சில மாநகரங்களை மட்டும் தேர்வு செய்து கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரையில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை, நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 26 காலை 6 மணிமுதல் ஏப்ரல் 29 இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும். மருத்துவமனை மெடிக்கல் போன்ற மாற்றுத்துவம் சார்ந்த பணிகள் மட்டுமே அனுமதிக்கப் படும். காவல் துறை வருவாய் பேரிடர் குடிநீர் வழங்கள் உள்ளாட்சி மின்சாரத்துறை போன்ற அத்தியாவசிய துறைகள் மட்டுமே செயல்படும்.


கோயம்பேடு மார்க்கெட் செயல்படும். ஆனால் நெறிமுறைகள் செயல்படுத்தப்படும். வேறு எந்த ஒரு காய்கறி கடைகளுக்கும் இந்த நான்கு நாட்களிலும் அனுமதி கிடையாது. பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட மற்ற அரசு துறைகளும் இயங்காது.


வங்கி போன்ற பணியிடங்களில் 33% பணியாளர்களை கொண்டு மட்டும் இயங்கலாம். சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். மேற்கண்ட மாநகரங்களில், உணவகங்களில் தொலைபேசி மூலம் மட்டுமே ஆர்டர் செய்து உணவைப் பெற முடியும். நேரில் சென்று உணவு வாங்குவது கூடாது. காய்கறி வாங்குவதற்கும் வெளியே செல்லக் கூடாது. இது தான் முழு ஊரடங்கு என்பதன் பொருளாகும்.


இந்த நான்கு நாட்களிலும் அனுமதி கிடையாது. பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட மற்ற அரசு துறைகளும் இயங்தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம். பிற அலுவலகங்களுக்கு ஊழியர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. 


Previous Post Next Post