தமிழகத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்

தமிழகத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1596 ஆனது.


தமிழகத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழப்பு 18 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 635 ஆக உள்ளது. 


சென்னையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை சென்னையில் 358 பேருக்கு நோய்த்தொற்று ஏற்ப்பட்டுள்ளது. 


மேலும் கோவையில் ஒருவர், செங்கல்பட்டு 3 பேர், நாமக்கல் ஒருவர், தஞ்சை 3 பேர், விழுப்புரம் 4 பேர், திருவாரூர் ஒருவர், தென்காசி 5 பேர், திருச்சி 4 பேர், விழுப்புரம் 3 பேர், புதுக்கோட்டையில்  ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நேற்றுவரை வீட்டுக்கண்காணிப்பில் இருந்தவர்கள் எண்ணிக்கை1,08,337 ஆக இருந்தது. இதுவரை 87,159 பேர் 28 நாள் வீட்டுக்கண்காணிப்பை முடித்து உள்ளனர். 


53,045 மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பபட்டு இருந்தது. இதில் 43,582 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 1990 மாதிரிகள் சோதனையில் இருக்கிறது.


ஏற்கனவே சோதனை செய்யப்பட்டவர்களின்  5877 மாதிரிகள் மறுசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.