தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் எகிறுது பாதிப்பு... தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா... இன்று மட்டும் 13 பேர் பலி


தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக 500 முதல் 800 வரை இருந்த  நோயாளிகள் எண்ணிக்கை, நேற்று 938 ஆனது.


இன்றைய கொரானா பாதிப்பு தமிழ்நாட்டில் ஆயிரம் பேரை தாண்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்  பாதிப்பு எண்ணிக்கையானது 1149 ஆக அதிகரித்து உள்ளது.  

இதன்மூலம் தமிழகத்தில் இன்று வரை நோய் பாதிப்பு உடையவர்கள் எண்ணிக்கை 22,333 ஆக உள்ளது.

12,807 பேருக்கு சோதனை நடத்தியதில் 1,149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 173 ஆக அதிகரித்து உள்ளது.

இன்னும் 6,710 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னையில் 84, செங்கல்பட்டில் 85, திருவள்ளூரில் 47, திருவண்ணாமலை 45, காஞ்சிபுரம் 16, சேலம் 13 பேர் உள்பட தமிழகத்தில் 1054 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதுதவிர வெளிநாட்டிலிருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்துவந்த 95பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே நாளில் 11,00க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சராசரியாக தினமும் 12,000 முதல் 13 ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் சோதனையில் இந்த தொற்று பாதிப்பு தெரிய வந்துள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலான தளர்வுகள், பொது போக்குவரத்து துவக்கம் உள்ளிட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நோய்த் தொற்று அதிவேகமாக பரவி வருவது பல்வேறு தரப்பிலும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.