ஒருவாரத்துக்கு 1000 பேருக்கு மதிய உணவு- முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ.,கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தனர்


திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள 16வது வார்டு பாண்டியன் நகரில் வாழும் புலம்பெயர்ந்த நெசவாளர் மற்றும் பனியன் தொழிலாளர்கள் சேர்ந்த 1000 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு மத்திய உணவு வழங்கும் நிகழ்ச்சியை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,கே.என்.விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


நிகழ்ச்சி ஏற்பாடுகளை 16வது வார்டு கிளை சார்பில் ரேவதி குமார் (எ) குத்துக்குமார் செய்திருந்தார், நிகழ்ச்சியில் வடக்கு தொகுதி பொறுப்பாளர் ஜெ.ஆர்.ஜான், பகுதி செயலாளர் பட்டுலிங்கம், செயற்குழு உறுப்பினர் பூலுவப்பட்டி பாலு, கிளை பொறுப்பாளர்கள் வீராசாமி, கிருஷ்ணன், , நாராயணன்,  விஜயா, கணேஷ், அனிதா,பாமா முத்துக்குமார், 17வது வார்டு பொறுப்பாளர்கள் இமானுவேல், கார்த்திக், கோபால், 27வது வார்டு கிளை செயலாளர் கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் நீதிராஜன், பழனிக்குமார், ஹரிஹரசுதன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், பாசறை ஷாஜகான், அருண் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.