3 பேர் பலி... இன்றும் 536 பேருக்கு கொரோனா.. நாடு முழுவதும் ஒரு லட்சத்தை நெருங்குகிறது நோய் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 364 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. 


தமிழகத்தில் மொத்த பாதிப்பு 11,760 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 7114 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,406 ஆக உள்ளது. 


இதன்மூலம்  நாடு முழுவதும் 96,169 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்தை எட்டி விடும் நிலையில் நோய்ப்பரவல் வேகம் குறையாமல் அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது. 


இன்று 3 பேர் மரணமடைந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக உள்ளது. 


இந்தியாவிலேயே அதிகளவு தமிழ்நாட்டில் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 85 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. 


தமிழகத்தில் ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 7648 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.