திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது

சென்னை: நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி நிகழ்ச்சி ஒன்றில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகள் மற்றும் அரசு பதவிகளில் உள்ளது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல்கள் வெளியாகின.அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் கல்யாண சுந்தரம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகாரின்படி நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதைதொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பேட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.