மீண்டும் 500 ஐ தாண்டிய பாதிப்பு... தமிழகத்தில் 639 பேருக்கு கொரோனா... 4 பேர் பலி

தமிழகத்தில் இன்று 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 81 பேருக்கும் தொற்று உறுதியான நிலையில், இன்று தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 639 ஆக இருக்கிறது.,


இதன்மூலம் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உள்ளது. 


கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகம் உள்ளது. இங்கு இன்று மட்டும் 480 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இத்துடன் சென்னையில் மட்டும் 6750 ஆக உள்ளது.


இன்று 4 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 78 ஆக ஆகி இருக்கிறது. 


13,081 பேருக்கு இன்று மட்டும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 3,11,621 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.