தமிழகத்தில் இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா... 6 பேர் பலி

தமிழகத்தில் மட்டும் 678 பேர், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 138 பேர் மற்றும் கேரளாவில் இருந்து வந்த ஒருவர் என 817 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 18,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. 


சென்னையில் இன்று 558 பேர் உள்பட 12,203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இன்று 6 பேர் மரணம் அடைந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது.


8,500 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று விட்டனர்.


இன்று மட்டும் 11,231 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 4,42,970 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


இன்னும் கொரோனா அறிகுறி உடன் 5,771 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர்.