கொரோனா பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி  இன்று (13.5.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு மேற்கொண்டு பேசியது:


அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இன்னும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதையெல்லாம் அரசு தீர பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.


இன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சில ஆலோசனைகளை நாங்கள் வழங்கி இருக்கின்றோம். அதையும் பின்பற்றி இந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணியிலே நீங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.


வேளாண்மைத் தொழிலை பொறுத்தவரைக்கும், ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டு, அந்தப் பணிகள் அனைத்தும் சிறப்பான முறையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு எந்தவித தடையும் இல்லாமல் இன்றைக்கு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள். தாங்கள் விளைவித்த விளைபொருட்களை உரிய முறையிலே விற்க அரசு ஏற்பாடு செய்திருக்கின்றது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் துணை நின்று அந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்ற அளவிற்கு அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


அதேபோல, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளை சந்தைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு வேளாண்துறை அதிகாரிகளுக்கு இந்த நேரத்திலே பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.


அரசினுடைய ஆலோசனையின்படி அத்தியாவசியப் பொருட்கள் உரிய நேரத்திலே அனைத்து மாவட்டங்களிலும் தங்குதடையில்லாமல் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் எந்த இடத்திலும் மக்களுக்கு உணவு பிரச்சனை இல்லை என்ற நிலையையும் நாம் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றோம்.


மருத்துவ சிகிச்சை அளிப்பதிலே இந்தியாவிலேயே நாம் முதன்மையாக விளங்கி கொண்டிருக்கின்றோம். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, நோய் அறிகுறி தென்பட்ட உடனேயே அவர்களாக மருத்துவமனையிலே சேர்ந்து சிகிச்சை பெற்றால் பூரண குணமடைந்து விடுகிறார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்தவர்கள் மூலமாகத் தான் இந்த நோய் தொற்று பரவல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பரவலை தடுப்பதற்கு அரசு எடுத்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. இன்றைக்கு படிப்படியாக மருத்துவமனையிலே சேர்க்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றார்கள். இருந்தாலும் இன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலர் குறிப்பிட்டது என்னவென்றால், தங்கள் மாவட்டத்தில் எந்த வைரஸ் பரவலும் இல்லை. அதேவேளையிலே தங்கள் மாவட்டத்திலிருந்து வாழ்வாதார பிரச்சனை காரணமாக வேறு மாவட்டத்திற்கு சென்று தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். அப்படி பணிபுரிகின்றபோது அவர்களுக்கு தொற்று ஏற்பட்டு அவர்கள் சொந்த மாவட்டத்திற்கு திரும்புகின்ற போது தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது என்பதாகும்.


ஆகவே, நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி இன்னும் பல மாவட்டங்களிலிருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் தொழில் செய்வதற்காகவும், தொழிலாளர்களாக பணிபுரிவதற்காகவும் சென்னைக்கு வருகின்றார்கள். அவர்கள் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினாலே சொந்த மாவட்டங்களுக்கு திரும்பிய காரணத்தினாலே, அங்கே அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட போது, பரிசோதனையிலே பெரும்பாலானவர்களுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அதனால் நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும், மற்ற மாவட்டங்களிலும் இந்த தொற்று ஏற்பட்டிருக்கின்ற செய்தியை நாம் அறிந்திருக்கின்றோம். அவர்கள் எல்லாம் குணமடைய செய்வதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மூன்று நான்கு நாட்களில் சென்னையிலிருந்து தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு சென்ற அனைவருக்குமே பரிசோதனை செய்யப்பட்டு அதன்மூலமாக அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைய செய்வோம்.


இன்றைக்கு சென்னையை பொறுத்தவரைக்கும், நோய் பரவுவற்கு காரணம் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல சென்னை மாநகரம் அதிகமாக மக்கள் வசிக்கின்ற பகுதியாக இருக்கின்றது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 26 லட்சம் பேர் குடிசைப் பகுதியிலே வசித்து வருகின்றார்கள். நெருக்கமான பகுதி, குறுகலான தெரு, அதிகமான மக்கள் வசிக்கின்றார்கள். ஆகவே, எளிதில் நோய் தொற்று ஏற்படுகின்ற சூழ்நிலை உள்ளது.


அதுமட்டுமல்லாமல், சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட். 1996-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, 3941 கடைகள் இங்கே இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த மார்க்கெட்டில் சுமார் 20,000 பேர் பணிபுரிந்து வருகின்றார்கள். அதிலே வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், லாரிகளில் வருகின்ற சரக்குகளை இறக்குகின்ற தொழிலாளர்கள், சில்லறை வியாபாரிகள் கொண்டு வருகின்ற வாகனங்களுக்கு காய்கறிகளை ஏற்றக்கூடிய தொழிலாளர்கள் என சுமார் 20,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.


இங்கு தொற்று ஏற்படும் என்று ஏற்கனவே நம்முடைய உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் 19.3.2020 அன்று சிஎம்டிஏ அதிகாரிகள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இங்கே அதிகமான பேர் குழுமியிருக்கின்ற காரணத்தினாலே நோய் தொற்று ஏற்பட்டுவிடும், ஆகவே அரசு உங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்கும், நீங்கள் தற்காலிக மார்க்கெட் அமைக்கக்கூடிய பகுதியிலே சென்று காய்கறி விற்பனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். நாங்கள் இங்கேதான் வியாபாரம் செய்ய முடியும். ஏனென்றால் வேறு பகுதியிலே சென்று விற்பனையை துவங்கினால் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகிவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் சென்னைக்கு வெளியிலே அரசால் அமைக்கக்கூடிய தற்காலிக மார்க்கெட்டிற்கு செல்ல விரும்பவில்லை.


தொடர்ந்து பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் 29.3.2020 அன்று நேரடியாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று அங்கிருக்கின்ற நிலவரத்தை பார்வையிட்டார்கள். அப்பொழுதும் அங்கே இருக்கின்ற சங்க நிர்வாகிகளிடத்திலே, இங்கே அதிக அளவிலேயே மக்கள் கூடுகின்றார்கள், ஆகவே தொற்று ஏற்பட்டுவிடும். தேர்வு செய்யப்படுகின்ற தற்காலிக மார்க்கெட்டிற்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும், தொற்றை தடுக்க முடியும் என்று அவர்கள் எடுத்து சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.


அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து அரசு முயற்சி செய்து வந்தது. 6.4.2020 அன்று மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்திலே அவருடைய அறையிலே வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். வியாபாரிகளும் பாதிப்பார்கள், தொழிலாளர்களும் பாதிப்பார்கள், வருகின்ற மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதையெல்லாம் உணர்ந்து அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். அரசு தற்காலிக அமைக்கின்ற அந்த மார்க்கெட்டிற்கு நீங்கள் செல்கின்ற போது உங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அதனால் இந்த தொற்று பரவலை தடுக்க முடியும் என்று எடுத்து சொன்னார்கள். ஆனால் சங்க நிர்வாகிகள் நாங்கள் அங்கே இருந்து வெளியிலே சென்று வியாபாரம் செய்தால் நஷ்டத்திற்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்ச உணர்விலேயே அரசு சொல்கின்ற கருத்தை ஏற்கவில்லை. மீண்டும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் 11.4.2020 அன்று கோயம்பேடு சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இங்கே இருக்கின்ற பிரச்சனையை உணர்ந்து நீங்கள் அரசிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அப்பொழுதும் எடுத்து சொன்னார். இன்றைக்கு தமிழகம் முழுவதும் இருக்கின்ற காய்கறி கடைகளை நாங்கள் மாற்றி அமைத்திருக்கின்றோம். ஆனால் கோயம்பேடு பகுதியிலே யாரும் முகக்கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. ஆகவே நீங்கள் வேறு இடத்திற்கு மாற்றி சென்றால் தான் இந்த நோய் பரவலை தடுக்க முடியும் என்ற கருத்தை சொன்னார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. அரசு ஏற்பாடு செய்யக்கூடிய தற்காலிக காய்கறி கடைக்கு சென்றால் தங்களுடைய தொழில் கடுமையாக பாதிக்கும், அந்த நிலையை தான் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருந்தார்கள். இருந்தாலும் அரசாங்கம் எடுத்து கூறியது. தொற்று பாதிக்கப்பட்டுவிட்டால் ஒட்டுமொத்தமாக கடைகளை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும், இதையெல்லாம் நீங்கள் உணர்ந்து அரசிற்கு ஒத்துழைப்பு கொடுத்து, அரசு ஏற்படுத்துக்கின்ற தற்காலிக மார்க்கெட்டிற்கு சென்றால் இந்த பிரச்சனை தீர்க்கப்படும், நீங்கள் சிறப்பாக வியாபாரம் செய்யலாம், தொற்றும் ஏற்படாமல் இருக்கும் என்ற செய்தியை சொன்னார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் 24.4.2020 அன்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.


அதுமட்டுமல்லாமல் நம்முடைய மாநகராட்சி ஆணையர் அவர்களும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதோடு இங்கே இருக்கின்ற உயரதிகாரிகள் நம்முடைய காவல்துறை ஆணையாளர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள், சிஎம்டிஏ அதிகாரிகள் நேரடியாக அங்கே சென்று கூட அவர்களிடத்திலே வலியுறுத்தி சொன்னார்கள்.


நோய் தொற்று ஏற்பட்டுவிட்டால் இங்கே தொழில் செய்து வருபவர்கள் அத்தனைபேரும் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடுவீர்கள். ஆகவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடைய ஆலோசனையின்படி தான் நாங்கள் வந்திருக்கின்றோம். அத்தனை வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும், தொழில் செய்கின்ற தொழிலாளர்கள் அத்தனைபேருக்கும் எடுத்துச் சொல்லி, நீங்கள் இந்த மார்க்கெட்டை அரசால் வெளியிலே தேர்வு செய்த இடத்திற்கு நீங்கள் சென்றால் இந்த நோய் பரவலை தடுக்க முடியும் என்ற கருத்தை சொன்னார்கள். அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ஆகவே, இப்படி பலமுறை கோயம்பேடு சந்தை நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அரசு கடும் முயற்சி எடுத்தது. ஆனால் வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் வேறு இடத்திற்கு சென்று மார்க்கெட்டை துவங்கினால் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடும், நஷ்டத்திற்கு ஆளாகிவிடும் என்ற எண்ணத்திலே இருந்துவிட்ட காரணத்தினால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது.


இன்றைக்கு கோயம்பேட்டில் இருந்து அதிகமான பேர் வெளிமாவட்டத்திற்கு சென்ற காரணத்தினாலே, அந்த மாவட்டங்களிலே நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. சென்னையிலும் இந்த எண்ணிக்கை உயர்ந்ததற்கு காரணம் இதுதான்.


அரசைப் பொறுத்தவரைக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பலமுறை கோயம்பேடு மார்க்கெட் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அங்கு இருக்கின்றவர்கள் தங்களுடைய விற்பனை பாதிக்கப்பட்டு விடும், அதனால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இருந்த காரணத்தினாலே அவர்கள் வேறு இடத்திற்கு செல்ல மறுத்தார்கள். இருந்தாலும், அரசு இந்த நோய் பரவல் ஏற்பட்டவுடனேயே அந்த மார்க்கெட் மூடப்பட்டு, அந்த வியாபார சங்கங்களை அழைத்து இனி இங்கே காய்கறி விற்பனை நடக்க அரசு அனுமதிக்காது என்ற செய்தியைச் சொன்னவுடன் அவர்களும் ஒத்துக் கொண்டார்கள். திருமழிசை பகுதியிலே மார்க்கெட் அமைக்கப்படும் என்ற செய்தியைச் சொன்னோம். அவர்களும் ஏற்றுக் கொண்டு அந்தப் பகுதிக்கு அவர்கள் ஒத்துழைப்பை நல்கினார்கள். அங்கே மார்க்கெட் அமைக்கப்பட்டு இப்பொழுது 10.5.2020 மாலையிலிருந்து அந்த காய்கறி மார்க்கெட் பணியை துவங்கி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் கோயம்பேடு பகுதியிலே நோய் பரவல் அதிகமாக ஏற்பட்டு விட்டது என்று இன்றைக்கு பல ஊடகங்களில், செய்திகளிலும் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அது உண்மைக்கு புறம்பானது. நான் சொன்ன செய்திகளின் அடிப்படையிலே பல்வேறு முயற்சிகள் அரசால் எடுக்கப்பட்டது. ஆனால் அங்கிருக்கின்ற வியாபார நிர்வாகிகள் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள், அரசால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட காய்கறி மார்க்கெட் செல்ல மறுத்தார்கள், இதுதான் உண்மை நிலை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றேன்.


இன்றைக்கு வெளிமாநில தொழிலாளர்கள் அதிகமாக தமிழகத்திலே பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்குச் செல்வதற்காக விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களை அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கு முழு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் செல்கின்ற பயணச் செலவு முழுவதும் அரசே ஏற்றுக் கொள்கிறது, ரயில்வே கட்டணம் முழுதும் அரசே ஏற்றுக் கொள்கிறது. ஆனாலும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள், அவர்களுக்கு முழுமையான அனுமதி கிடைக்காத காரணத்தினாலே காலதாமதம் ஏற்படுகிறது. அதோடு அவர்கள் செல்கின்ற ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியம். அவர்கள் குறிப்பிட்ட ரயில் தான் நமக்கு ஒதுக்கித் தருகின்றார்கள். ஆகவே, ஒரு நாளைக்கு 8, 10 ரயில் தான் நமக்கு ஒதுக்கி கொடுக்கின்றார்கள். ஆகவே, காலதாமதம் ஏற்படுகின்றது. ஆகவே, வெளிமாநிலத் தொழிலாளர்கள் படிப்படியாக அவர்கள் விருப்பப்படி தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு அரசு ஏற்பாடு செய்து கொடுக்கும். அதுவரை, அவர்கள் பொறுமை காக்க வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.


வெளி மாநிலத்தில் தங்கி பணிபுரிகின்ற தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளும் படிப்படியாக தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பொருட்டு, மகாராஷ்டிராவிலிருந்து நாம் அழைத்து வந்திருக்கின்றோம். பிற மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்திருக்கின்றோம். அனைவரையும் படிப்படியாக நம்முடைய மாநிலத்திற்கு அழைத்து வருவதற்குண்டான நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு என்னென்ன வழியிலே நன்மை செய்ய முடியுமோ அனைத்து வகைகளிலும் நன்மை செய்து கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு எந்தெந்த வகையிலே உதவி செய்ய முடியுமோ அனைத்து வகையிலும் உதவி செய்யப்பட்டு வருகிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன். 24.3.2020 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டத்திலிருந்து இதுநாள்வரை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், அவருக்கு கீழ் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் சிறப்பான முறையிலே பணியாற்றிய காரணத்தினாலே, தமிழகத்திலே இந்த வைரஸ் பரவல் இன்றைக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.


அதேபோல நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள், நம்முடைய டிஜிபி அவர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த செயலாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், அவர்களுக்குத் துணையாக இருந்த அனைத்துத் துறை அலுவலர்களும் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்ட காரணத்தினாலே இன்றைக்கு நோய் பரவல் தடுக்கப்பட்டிருக்கின்றது. அரசைப் பொறுத்தவரைக்கும், ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பான முறையிலே பணியாற்றிய காரணத்தினாலே இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, அதிகமான நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதனால் தான், பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதே யொழிய, மற்ற மாநிலத்தைப் போல் அல்ல. பாதிக்கப்பட்ட அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய சிசிக்சை அளிக்கப்பட்டு, குணமடையச் செய்ய வேண்டும் என்பது தான் அரசினுடைய நோக்கம். ஆகவே இன்றைக்கு படிப்படியாக நாம் ஊரடங்கை தளர்த்திக் கொண்டிருக்கிறோம். இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு உண்டான முயற்சியை அரசு எடுத்து வருகின்றது. 10) தொழிற்சாலைகள் இன்றைக்கு திறக்கப்படுகின்றன, வேளாண் பணிகள் முழுமையாக நடைபெற்று வருகின்றன,


இன்றைக்கு மக்களுக்கு நாம் சொல்லுவதெல்லாம் விழிப்புணர்வு, அந்த விழிப்புணர்வை அனைத்து மாவட்ட அட்சித் தலைவர்களும், காவல் துறை அதிகாரிகளும், உள்ளாட்சித்துறையைச் சேர்ந்தவர்களும், வருவாய்த்துறையைச் சேர்ந்த்தவர்களும் ஒருங்கிணைந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்றைக்கு ஒவ்வொரு வீதியாக நாம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமாகத் தான் நோய் பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும். ஆகவே, வெளியில் செல்கின்ற போது கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். அதேபோல, பொருட்கள் வாங்குகின்ற போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அநாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியிலே சென்று வீடு திரும்புகின்ற போது கை கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதைப் பின்பற்றினாலே வைரஸ் பவுதலை தடுக்க முடியும். இதைத்தான் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்கள் சொல்கின்றார்கள். இதைக் கடைப்பிடித்தால் போதும், நோய் பரவலை தமிழகத்திலே தொழிலாளர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் கிடைக்கின்ற சூழ்நிலைகளை இன்றைக்கு நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உரிய நேரத்திலே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஆகவே, எவ்வித குறைபாடும் இல்லாமல், அரசு மக்களை காத்து வருகின்றது என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகிறேன். அதேபோல, நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். ஆகவே, என்னுடைய கருத்துக்களையெல்லாம் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சிறப்பாக செயல்படுத்தியதன் விளைவு, இன்றைக்கு இந்தியாவிலேயே கொரோனா நோய் தடுப்பில் தமிழ்நாடு ஒரு சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


இன்றைக்கு மக்களுக்கு நாம் சொல்லுவதெல்லாம் விழிப்புணர்வு, அந்த விழிப்புணர்வை அனைத்து மாவட்ட அட்சித் தலைவர்களும், காவல் துறை அதிகாரிகளும், உள்ளாட்சித்துறையைச் சேர்ந்தவர்களும், வருவாய்த்துறையைச் சேர்ந்த்தவர்களும் ஒருங்கிணைந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்றைக்கு ஒவ்வொரு வீதியாக நாம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமாகத் தான் நோய் பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும். ஆகவே, வெளியில் செல்கின்ற போது கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். அதேபோல, பொருட்கள் வாங்குகின்ற போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அநாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியிலே சென்று வீடு திரும்புகின்ற போது கை கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதைப் பின்பற்றினாலே வைரஸ் பவுதலை தடுக்க முடியும். இதைத்தான் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்கள் சொல்கின்றார்கள். இதைக் கடைப்பிடித்தால் போதும், நோய் பரவலை தமிழகத்திலே 11 தடுக்கலாம். ஆகவே நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்களும், நம்முடைய காவல் துறை அதிகாரிகளும் மற்றும் பிற துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தினந்தோறும் கிருமிநாசினி தொடர்ந்து தெளிக்க வேண்டும். அதேபோல, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருக்கின்ற பொதுக் கழிப்பறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் பலர் பயன்படுத்துகின்றார்கள், அதனால் தொற்று ஏற்பட்டுவிடும். அதேபோல, தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து எவரும் வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில் இருக்கின்றன்ற மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் எடுக்க வேண்டும். அரசு அறிவிக்கின்ற நலத்திட்ட உதவிகள் உரிய நேரத்திலே மக்களுக்கு போய் சேர மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கின்றேன்.


பிற மாநிலத்திலிருந்து வருகின்ற சரக்கு வாகனங்களை ஓட்டி வருகின்ற டிரைவர்களை, கிளினர்களை அந்ததந்த மாவட்டத்தில் சரக்குகளை இறக்குகின்ற போது, டிரைவர்களையும், கிளினர்களையும் நோய் தொற்று உள்ளதா என கண்காணிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மூலமாக தொற்று ஏற்பட்டு விடும். பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சொன்னீர்கள், வெளி மாநிலத்திலிருந்து வருகின்ற இந்த தொழிலாளர்கள் மூலமாகவும், அதேபோல லாரி டிரைவர்கள், கிளினர்கள் மூலமாகவும் நோய் தொற்று அதிகமாக வருகின்றது என்கிறீர்கள். ஆகவே, அவர்களையும் நீங்கள் தனிமைப்படுத்தி வைத்துக் கொண்டால் நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.


அதேபோல கோடை காலமாக இருக்கின்ற காரணத்தால் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 1-ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி, அந்த மாணவர்கள் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்குண்டான வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கின்றேன்.


மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கின்ற மாவட்டங்களில் குடிமராமத்து மற்றும் தூர்வாறும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்களை கேட்டுக் கொள்கின்றேன். ஏனென்றால் பருவ மழை துவங்க இருக்கின்றன, சாரல் மழை துவங்க இருக்கின்றன. ஆகவே அது துவங்கி விட்டால் அந்தப்பணி தடைபட்டு போய்விடும். ஆகவே மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கின்ற மாவட்டங்களில் குடிமராமத்து மற்றும் தூர்வாறும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.


டெல்டா மாவட்டத்தில் இருக்கின்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தூர்வாறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் குடிமராமத்து பணிகளை விரைவாக துவங்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கின்றேன்.


இன்றைக்கு தமிழகத்தை பொருத்தவரைக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக இருக்கின்றது. சிறு தொழில்கள், தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கின்ற மாநிலம். ஆகவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகள் இருக்கின்ற தொழிற்சாலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம்.


அதற்கு நீங்கள் நேரடியாக சென்று, எந்தெந்த தொழில் துவங்க முடியுமோ அந்தந்த தொழில் துவங்க நீங்கள் அனுமதி அளிக்கலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. ஏனென்றால் சென்னையை தவிர்த்து, தடை செய்யப்பட்ட பகுதியை தவிர்த்து, மற்ற பகுதியிலே தொழில் துவங்கலாம். அதோடு அரசு அறிவிக்கின்ற அந்த கடைகளை எல்லாம் துவக்கலாம். ஏற்கனவே, விதிமீறல்கள் மீறப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த கடைகள் திறக்கப்பட்டு விடலாம். விதிமீறல்கள் மீறப்பட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, தெளிவுபடுத்தி, அரசு விதிமுறைகளின்படி அவர்கள் பணிபுரிய அனுமதிக்கலாம். இன்றைக்கு அரசு அறிவிக்கின்ற விதிமுறைகளை பின்பற்றி தொழில்களை துவக்கலாம் என அறிவுறுத்துங்கள். அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் தொழிற்சாலை இயங்க வேண்டும். மிகமிக முக்கியம். தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அதோடு, அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்ற கழிப்பறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகளாக இருந்தால் அங்கேயே மருத்துவர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வருகின்ற தொழிலாளர்கள் பரிசோதனை செய்த பிறகுதான் அவர்களை அனுமதிக்க வேண்டும். இதையெல்லாம் நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று நீங்கள் அந்தந்த தொழில் நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.


துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இன்றைக்கு சிறப்பான பணிகளை மேற்கொண்ட மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசு அறிவிக்கின்ற அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையிலே மக்களுக்குச் சேர்வதற்கு நல்ல அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குகின்ற நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்களுக்கும், இன்றைக்கு தமிழகத்திலே காவல் துறை அதிகாரிகளும், காவலர்களும் சிறப்பான முறையிலே பணியாற்றுவதற்கு தலைமைப் பொறுப்பு ஏற்று இருக்கின்ற DGP அவர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களுக்கும், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அதேபோல வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், இன்னும் நம்முடைய மாநிலத்தில் இருக்கின்ற பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், உடன் இணைந்து செயல்பட்ட அலுவலர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும், அதேபோல பல்வேறு குழுக்களுக்கு தலைமைப் பொறுப்பேற்று நடத்துகின்ற அனைத்து துறைச் செயலாளர்களுக்கும், பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் தங்களுடைய கடமையை சிறப்பாக செயலாற்றிய அனைத்து உயர் அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம். மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து அரசின் ஆலோசனைகளைக் கேட்டு சிறப்பான முறையில் பணியாற்றிய அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும், காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும், அதோடு, அவர்களுக்கு கீழ் பணிபுரிகின்ற அனைத்து