இப்படித்தான் பிறந்தநாள் கொண்டாடோணும்... 1000 ஏழை குடும்பங்களுக்கு அரிசிப்பைகளை வழங்கிய பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர்... பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் வழங்கப்பட்டது

         மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் தனது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனாவால் வறுமையில் வாடும் 1000 குடும்பங்களுக்கு அரிசி சிப்பம் வழங்கினார். இவை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் யு.எஸ்..பழனிசாமியின் மகள் பிரீத்திகா.  ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரீத்திகா தனது பிறந்தநாளை மக்களுக்கு பயனுள்ளதாக கொண்டாட முடிவெடுத்தார்.

     அதன்படி இவரது 23வது பிறந்த நாளை முன்னிட்டு தனது வருமானத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வறுமையில் வாடும் 1000 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிட திட்டமிட்டார்.. 
    இதனையடுத்து இவரது பிறந்தநாளான ஜூன்.11-ம் தேதி, இவரது சொந்த ஊரான உகாயனூர் ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையம், அகிலாண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள  ஏழை குடும்பங்களுக்கு அரிசி வழங்குவது பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில், தனது வருமானத்தில் 1000 ஏழை, எளிய குடும்பங்களுக்கு  அரிசி சிப்பங்களை வாங்கி வழங்கினார்.. 

    இந்த நிகழ்ச்சியில்  பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி சிப்பங்களை வழங்கினார். அரிசி பைகளை பெற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள் சாப்ட்வேர்   இன்ஜினியர் பிரீத்திகாவை வாழ்த்தினார்கள். 
Previous Post Next Post