தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் - அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.!


தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவில் பிள்ளை விளை பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையக் கட்டிட பணியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளீர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன் இன்று அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் பகுதி செயலாளர்கள் நிர்மல் ராஜ், ஜெயக்குமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.