"ஸ்மார்ட் சிட்டி பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும் " - தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையரிடம் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் கோரிக்கை மனு.!


இது குறித்து தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் AlCCI வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது

"தூத்துக்குடி மாநகராட்சியில் 19.6.2021 புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள சாருஸ்ரீ அவர்களை தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம் 

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் 3.8.1982 இல் ஆரம்பிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அவர்கள் உப்பு உற்பத்தியாளர்கள் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆகிய சுமார் 450 உறுப்பினர்கள் கொண்டு திறம்பட செயல்பட்டு வருகிறது எங்களது வர்த்தக சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகளை அவ்வப்போது தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு சமர்ப்பித்து பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதையும் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முன்னேற்றம் தூத்துக்குடி நகர வளர்ச்சி ஆகியவைகளில் மிகவும் கவனம் செலுத்தி வருவது எங்களது அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் அன்று சமர்ப்பிக்கப்படும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை தாங்கள் துரிதமாக செயல்படுத்த தங்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 1. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில் நடைபெற்று வரும் சாலை கட்டுமான பணிகள் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பழைய பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிப்பதற்கு தாங்கள் துரித நடவடிக்கை எடுக்குமாறு தங்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மேலும் ஸ்மார்ட் சட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில் புதுப்பித்துக் கொண்டிருக்கும் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் ஆரம்பிக்கப்பட்டது நிரம்பி கிடப்பதால் கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் கால்வாய்கள் இல்லையே தேங்கிக்கிடந்த சுகாதார கேடு விளைவிக்கக் கூடியதாக உள்ளது இந்தச் சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில் புதுப்பித்துக் கொண்டிருக்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க தாங்கள் துரித நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்

2. தூத்துக்குடியில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது நகர்ப்புறப் பகுதிகளில் போதிய வடிகால் வசதி இல்லாமல் தண்ணீரில் தத்தளிக்கிறது இதனால் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீரை அகற்றுவதற்கு தற்காலிக நடவடிக்கையாக மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வாடிக்கையாக நடந்து வருகிறது இதனால் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வீணாக செலவழிப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தனி வாழ்க்கை திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.