உணவு,வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் - ஆட்சியர் செந்தில்ராஜ், அறிவிப்பு.!


தற்பொழுது ஊரடங்கு தளரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திரளாக வணிக மையங்களுக்கு வந்நவண்ணம் உள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட்டுகள்,டீக்கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர், தெருவோர வணிகர்கள் விழாக்கால விற்பனையாளர்கள் உள்ளிட்ட உணவு வணிகர்களில், 

2177 வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமும், 15351 வணிகர்கள் உணவு பாதுகாப்புச் சான்றிதழும் பெற்றுள்ளனர். அறிகுறியில்லாமலோ அல்லது அறிகுறியுடன் உள்ள நோய்த் தொற்று உள்ளோரிடமிருந்து கொராணா மீண்டும் பொதுமக்களுக்கு பரவுவதை தடுப்பதற்காகவும், 

நலமுடன் உள்ளோர் கொராணய பாதிப்பிற்குள்ளாகாமல் தடுக்கவும், உணவு வணிக நிறுவன உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் கொராணா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு பணியும் இம்மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றது. 

இருப்பினும், அவ்வணிக நிறுவன உரிமையாளர்களும் பணியாளர்களும்  கொராணா நோய் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுவதில் தொய்வு காணப்படுகின்றது. எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு)

ஒழுங்குமுறைகள் 2011-ன் பட்டியல்-4, பகுதி-2-ன் விதி 10.1(4)-ல் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து உணவு வணிக நிறுவன உரிமையாளர்களும் பணியாளர்களும் கொள்ளை நோயான கொராணா நோய்க்கு எதிராக அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, நோய் பரவுதலைக்கட்டுப்படுத்திட உதவுமாறு அறிவிக்கப்படுகின்றது. 

தவறும்பட்சத்தில் உணவு வணிக நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. தடுப்பூசிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post