கோவில்பட்டியில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்.!


சமூக பாதுகாப்புத் துறையின்  தூத்துக்குடி மாவட்ட  ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஒவ்வொரு வட்டாரத்திலும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்  தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன்  (திட்டம் ),ஸ்ரீனிவாசன் (கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, முத்துபாண்டியன்  முன்னிலையில்  நடைபெற்றது.

கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தைகள் உரிமைகள், குழந்தை தத்தெடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர்சுரேத்து வாணி  சிறப்புரையாற்றினார்.

மேலும் கூட்டத்தில் கூட்டத்தின் உறுப்பினர்கள் தொழிலாளர் துணை ஆய்வாளர், சைல்ட் லைன் உறுப்பினர் கனகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post