குளங்களை ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் - சமத்துவ மக்கள் கழகம் ஆட்சியரிடம் மனு.!


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையின் மூலம் பாசன வசதி பெறும் சிவத்தையாபுரம், பேய்குளம், ஆறுமுகமங்கலம், கொற்கை, பழைய காயல், ஆகிய குளங்களை ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகள் மற்றும் காட்டுச் செடிகளை  

அப்புறப்படுத்தி குளங்கள் அனைத்தையும் தூய்மை படுத்த வேண்டி  சமத்துவ மக்கள் கழகம் சார்பாக மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் தலைமையில் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

நிகழ்வில் தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை, மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார், துணைச் செயலாளர் அருள்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், 

சமத்துவ மக்கள் கழக பிரதிநிதிகள் வின்சென்ட், பழனிவேல், இளைஞரணி துணைச் செயலாளர் முத்துகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.