பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை


பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் காய்கனி சிக்னல் அருகே அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்,தெற்கு மாவட்டம் சார்பில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர்,மாநில மீனவர் அணி துணை செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ்  மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.