தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாள் விழா- அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.!


பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச்செயலாளர் சந்தானம், மாவட்ட இணைச்செயலாளர் செரினாபாக்கியராஜ், மாநில மருத்துவ துணைசெயலாளர் ராஜசேகர், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, 

வக்கீல் அணிசெயலாளர் சேகர்,  எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, துணைசெயலாளர் வலசை வெயிலுமுத்து, சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், 

இலக்கிய அணி செயலாளர் நடராஜன், பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், பகுதி இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், துணைச்செயலாளர் டைகர்சிவா, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன், 

வர்த்தக அணி செயலாளர் பட்டுராஜா, வக்கீல்கள் செங்குட்டுவன், முனியசாமி, கோமதி மணிகண்டன், சுகந்தன் ஆதித்தன், சரவணபெருமாள், வட்டச்செயலாளர்கள் உதயசூரியன், முருகன், அசோகன், உலகநாதபெருமாள், மற்றும் சத்யாலட்சுமணன், அசன், மைதீன், இம்ரான்கான், சாம்ராஜ், சகாயராஜ், சுரேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் சந்திராசெல்லப்பா, ஈஸ்வரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் அங்குள்ள அனைத்து சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ராமகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.