ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான 'ஐபோன்-13' செல்போன் இன்று அறிமுகம்.!


அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான 'ஐபோன்-13' செல்போனை இன்று அறிமுகப்படுத்துகிறது. 

கலிபோர்னியாவில் இருந்து மெய்நிகர் முறையில் ஆப்பிள் டிவி வாயிலாக ஐபோன்-13 அறிமுக விழா நடைபெறுகிறது. 

ஐபோன்-13, ஐபோன்-13 ப்ரோ, ஐபோன்-13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன்-13 மினி ஆகிய 4 மாடல்கள் அறிமுகமாகின்றன. 

இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபோன்-13 அறிமுக நிகழ்ச்சி பல்வேறு தளங்களில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.