ராஜஸ்தான் நீட் தேர்வு மோசடி - மாணவிக்கு உதவிய உறவினர் உள்ளிட்ட 8 பேர் கைது


மருத்துவபடிப்புக்கான நீட் நுழைவு தேர்வு  கடந்த 12.09.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மோசடி செய்து தேர்வெழுதிய மாணவி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

ராஜஸ்தான் மாநிலம்,ஜெய்ப்பூரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவி தினேஷ்வரி குமாரி,அதிக மதிப்பெண்கள் பெற உதவியாக,தேர்வு தொடங்கி அரை மணி நேரம் கழித்து நீட்தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த ராம் சிங்,தேர்வு மைய நிர்வாக பொறுப்பில் இருந்த முகேஷ் ஆகியோர் வினாத்தாளை போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப் வழியாக ஜெய்ப்பூரின் சித்திரகூட் பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் இருந்த இருவருக்கு அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அதை ஷிகார் பகுதியில் உள்ள சிலருக்கு அனுப்பி,200 கேள்விகளில் 172 கேள்விகளுக்கு சரியான விடைகளை பெற்று முகேஷ் வழியாக,ராம்சிங் பெற்று தினேஷ்வரி குமாரி எழுதியுள்ளார்.

இந்த மோசடிக்கு 30 லட்சம் ரூபாய் விலை பேசி, அதில் 10 லட்சத்தை தினேஷ்வரிகுமாரின் உறவினர் தயாராக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் 18 வயதான மாணவி தினேஷ்வரி குமாரி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த 8 பேரில் நீட் பயிற்சி மையம் நடத்தி வந்த இருவர் இருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.