பெல்ட் பக்கிள்களில் மறைத்து ரூ.15 லட்சம் மதிப்புடைய 350 கிராம் தங்கம் கடத்தல் - இலங்கையிலிருந்து சென்னை வந்த 2 பயணிகள் கைது


இலங்கையிலிருந்து சென்னை வந்த 2 விமானங்களில்  பெல்ட் பக்கிள்களில் ரூ.15 லட்சம் மதிப்புடைய 350 கிராம் தங்கத்தை நவீன முறையில்  கடத்தி வந்த 2 பயணிகளை சென்னை விமானநிலையத்தில்  சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இனிமேல் பயணிகளின் பெல்ட்களையும் பரிசோதிக்க சுங்கத்துறை முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்ன் ஏா்லைன்ஸ் விமானம் நேற்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது இலங்கையிலிருந்து வந்த சென்னையை சோ்ந்த 25 வயது ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தில் நிறுத்தி சோதனையிட்டனா்.அவருடைய உடமைகளில் ஒன்றும் இல்லை.ஆனாலும் சந்தேகம் தீராமல் அவரை முழுயாக சோதனையிட்டனா்.அவா் பேண்டில் அணிந்திருந்த பெல்ட் பக்கிள்  தங்கத்தால் செய்து,அதை மறைக்க பக்கில் மீது கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.

அதைப்போல் இலங்கையிலிருந்து சென்னை வந்த ஏா் இந்தியா பயணிகளை சோதனையிட்டனா்.அதில் வந்த 23 வயது சென்னையை சோ்ந்த பயணி ஒருவா் பேண்டில் அணிந்திருந்த பக்கிள் தங்கத்தில் செய்யப்பட்டு,வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்தனா்.

அடுத்தடுத்து இலங்கையிலிருந்து சென்னை வந்த 2 விமானங்களில் பெல்ட் பக்கிள்கள் தங்கத்தில் செய்து பெயிண்ட் அடித்து மறைத்து தங்கத்தை கடத்தி வந்த 2 சென்னை இளைஞா்களை சுங்கத்துறை கைது செய்துள்ளனா்.அவா்களிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புடைய 350  தங்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

அதோடு கைது செய்யப்பட்ட 2 இளைஞா்களை சுங்கத்துறை விசாரித்தபோது,தற்போது இதைப்போல் நவீன முறையில் இளைஞா்கள் சிலா்   தங்கம் கடத்துவது தெரியவந்துள்ளது.எனவே இனிமேல் சென்னை விமானநிலையத்தில் பயணிகள் அணிந்து வரும் பெல்ட்களையும் கழற்சி சோதனை செய்ய சுங்கத்துறையினா் முடிவு செய்துள்ளனா்.

Previous Post Next Post