கட்டிட விதிமீறலில் நெல்லை மருத்துவமனைகள்! சாட்டையை சுழற்றிய சமூக ஆர்வலர் பெர்டின் ராயன்.!


மருத்துவமனை கட்டிடம் விதி மீறலில் ஈடுபட்டு திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழுமம் ஆகியவற்றை ஏமாற்றி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் மருத்துவமனைகள் மீது  பொதுநல வழக்கு தொடர தயாராகும் சமூக ஆர்வலர் ராயன்

முன்னதாக ராயன்,திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் புரத்தைச் சேர்ந்த வி.ஜே மருத்துவமனை மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு WP(MD)8033/2020 தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பைப் பெற்று கடந்த 08/10/21 அன்று மாநகராட்சி அதிகாரிகளால் வி.ஜே மருத்துவமனை லாக் & சீல் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட நான்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 14 மருத்துவமனைகள் மீது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மேல்முறையீடு மூலம் முக்கிய தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும் அந்தந்த மருத்துவமனைகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி பொதுநல வழக்கு தொடரபடும் என்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 

இதனால் கட்டிட விதி மீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. 

Previous Post Next Post