தூத்துக்குடி : மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் நாளை முதல் ஜன.2 வரை 3 நாட்கள் பொதுமக்கள் கூடுவதற்கு தடை.! - ஆட்சியர் உத்தரவு.!


இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

"தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்காரன் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் ஒன்று கூடுவதால், கொரோனா மற்றும் ஒமைக்ரான வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால், பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் விடுமுறை நாட்களில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்த உத்திரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் சூழ்நிலையில், கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து கடற்கரைப்பகுதிகளிலும், தூத்துக்குடி கடற்கரை சாலை, மற்றும் சுற்றுலாத்தவங்களில் பொதுமக்கள் 31.12.2021, 01.01.2022, 02.01.2022 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது.

2022-ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதையொட்டி 31.12.2021 வெள்ளிக்கிழமை இரவு அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. மேலும் மேற்கண்ட அனைத்து இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை. அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு நலச்சங்கங்கள் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தக்கூடாது,

கோயில்கள் தேவாலயங்கள் மற்றம் மசூதி வழிபாட்டுத்தலங்களிலும் சம்மந்தப்பட்ட நிர்வாகிகள், அலுவலர்கள், தமிழக அரசின்

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க வேண்டும். மேலும் அங்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்துவதோடு, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அடிக்கடி சானிட்டைசர் கைகளுக்கு பயன்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும். கடை முகப்பில் முறையாக சானிட்டைசர், காய்ச்சல் பரிசோதனை செய்வதற்கான உபகரணங்களுடன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை முறையாக பரிசோதனை செய்து சானிட்டைசர் மூலம் கைகளை சுத்திகரித்து உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களும், கடை பணியாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதை கடை/வணிக நிறுவனங்கள் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கதவு ஜன்னல் அனைத்தையும் திறந்து அனைத்து அறைகளும் காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடை/வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் 100% கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா? என்பதை சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் உறுதிபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தற்போது அண்டை மாநிலங்களில் உருமாறிய கொரோனா - ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவி வருவதால், பொது இடங்களில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதன் காரணமாக நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை காலத்தில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும்,

 மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும், பொது மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


#Covid19 | #CoronaVirus #omicron

Previous Post Next Post