அய்யய்யோ... மறுபடியும் முதல்ல இருந்தா...??சென்னையில் ' பொத்துக்கிட்டு ஊத்துது மழை

மழைக்காலம் என்றாலே சென்னை மாநகர மக்களுக்கு நரக வேதனையாக தான் இருக்கும். வெள்ளம் வடியாமல் பொங்கி வழியும் சாலைகள், திக்குமுக்காட வைக்கும் போக்குவரத்து நெரிசல், வீடுகளுக்குள் புகும் கழிவு நீரும் வெள்ள நீரும் என சென்னை வாசிகள் லபோ.. திபோ.. என அடித்துக் கொள்ளும் நிலை தான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கின்றது.

இப்படி கடந்த மாதம் பெய்த பெரும்பான்மையானது சென்னை வாசிகளை சுமார் ஒரு மாதம் முடக்கி விட்டது. கார்த்திகை முடிந்து மார்கழி பனி தொடங்கிய காலத்தில் கூட மழை பெய்து வந்தது. எப்போ தான் மழை நிற்குமோ என தவியாய் தவித்தார்கள் சென்னை வாசிகள். 

ஒரு வழியாக கடந்த சில நாட்களாக மழை போய் பனி வந்தது. அதிகாலை குளிரும் பகலில் வெயிலுமாக மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில் இன்று காலை வழக்கம்போல பனி முடிந்து வெயிலுடன் தொடங்கியது. வழக்கம் போல எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் தங்கள் வேலைகளைப் பார்க்க ஆங்காங்கே கிளம்பிவிட்டனர். இந்த சூழ்நிலையில் தான் இன்று பகல் 11 மணி அளவில், சென்னையில் உள்ள அண்ணா சாலை, இசிஆர் சாலை உள்ளிட்ட மாநகரம் முழுவதும் திடீரென்று கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது.

படிப்படியாக ஆரம்பித்தால் மழை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்து வருகிறது.மதிய நேரத்தில் இருள் சூழ்ந்தது. ரோடெல்லாம் தண்ணீர் தீவுகளாக மாறிவிட்டது. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துவிட்டது.

எந்த ஒரு வானிலை அறிக்கை இல்லாத நிலையில் திடீரென கொட்டி தீர்த்து சென்னை வாசிகளை திக்குமுக்காடச் செய்த பெருமழை 11 மணிக்கு தொடங்கி மாலை 4.25 மணியையும் தாண்டி வானத்தை பொத்துக்கொண்டு ஊற்றுகிறது.

பாவம்தான் சென்னை வாசிகள்!

Previous Post Next Post