திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மரச நாயக்கனூர் ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முரளீதரன், மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பங்கேற்று கிராமப்புற மக்களிடம் கலந்துரையாடினார்கள். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி , வேளாண்துறை இயக்குனர் அழகு நாகேந்திரன், திம்மரசநாயக்கனூர், ஊராட்சிமன்ற தலைவர்  அக்ஷயா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.