உலக சைக்கிள் தினம் - தூத்துக்குடியில் சைக்கிள் பேரணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்


உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில்  சைக்கிள் பேரணி இன்று காலை தமிழ் சாலையில் உள்ள எம்ஜிஆர் பூங்காவில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துணை மேயர் ஜெனீட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்


இப்பேரணியின் துவக்க விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியானது எம்ஜிஆர் பூங்காவில் தொடங்கி மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் தந்தி ஆபீஸ் வழியாக மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் (மாநகராட்சி பழைய அலுவலகம்) சென்று நிறைவடைந்தது.


முன்னதாக தூய்மையான நகரங்களுக்கான மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது 

பின்னர், பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியருக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தண்ணீர், ஜீஸ் வழங்கினார். மேலும், அருகில் உள்ள கடைகளில் மாநகராட்சி சார்பில் குப்பைகளை பிரித்து கொடுப்போம் நம் நகரின் தூய்மை நம் ஒவ்வொருவரின் கடமை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது..

இந்நிகழ்வில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வட்டாட்சியர் செல்வக்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.அருண்குமார், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.