கோவில்பட்டியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகள்- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.!


கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனம் மணியாச்சி மீனாட்சி நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும். 

கோவில்பட்டி மெயின் ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணியையும்,


கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், 

கோவில்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை அருகே  சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளை 


முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு   அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,

ஒன்றிய செயலாளர்கள், வண்டானம் கருப்பசாமி, அன்பு ராஜ்,அய்யாதுரை பாண்டியன்,நகர துணைச் செயலாளர் மாதவராஜ், நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ், நகர மன்ற உறுப்பினர்கள், கவியரன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பக மூர்த்தி, 


மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் சீனி நாடார்,மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமான், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமர்,அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, 

வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி,அப்பாசாமி,பழனி குமார்,முருகன்,கோபி,ஜெயசிங், குழந்தை ராஜ்,செந்தில்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post