நொய்யல் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை -குளிக்க, செல்பி எடுக்க தடை

 வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் இறங்கி குளிக்க, துணி துவைக்க செல்பி எடுக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் 

திருப்பூர் நொய்யல் ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில் நொய்யல் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ் வினீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆறு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் சித்ரசாவடி தடுப்பணையில் இருந்து சுமார் 750 cusecs அளவுக்கு நீர்வரத்து உள்ளதால், தண்ணீர் அளவு மேலும் அதிகரித்து, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, கைபேசி கொண்டு சுயப்படம் (selfie) எடுக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிப்பொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எனவே, திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆறு மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆற்றின் கரையோரம் வாசிக்கும் பொது மக்கள் முன்னெச்சரிக்கை உடன் இருக்குமாறும், ஆற்றில் குளிப்பது, துணிகள் துவைப்பது உள்ளிட்ட மேற்படி தடை செய்யப்பட்ட செயல்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறும், மேலும் குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்ககூடாது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.எஸ்.வினீத்., தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post