தூத்துக்குடி அருகே பரோட்டா தராததால் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.!


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மேலத்தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் நடராஜன் (42) என்பவர் ஏரல் to ஸ்ரீவைகுண்டம் ரோடு பஜார் பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். 

இந்நிலையில் கடந்த 08.08.2022 அன்று இரவு ஹோட்டல் வியாபாரம் முடித்த நேரத்தில் அங்கு வந்த சிவராமமங்கலம் பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த வீரத்துரை மகன் தண்டபாணி (20) என்பவர் நடராஜனிடம் புரோட்டா கேட்டுள்ளார். 

இதற்கு நடராஜன் புரோட்டா முழுவதும் விற்பனை ஆகிவிட்டது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த தண்டபாணி, நடராஜனிடம் தவறாக பேசி தகராறு செய்து ஹோட்டலில் தேங்காய் உடைக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து நடராஜனை தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து நடராஜன் நேற்று (10.08.2022) அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி வழக்கு பதிவு செய்து எதிரி தண்டபாணியை கைது செய்தார்.

மேலும் தண்டபாணி மீது ஏற்கனவே ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post