ஈரோடு அருகே மொடக்குறிச்சி மோளப்பாளையம் அரசு பள்ளி சீரமைத்து ஒப்படைக்கப்பட்டது.!


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோவில் பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மோளப்பாளையம் அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைத்து ஆற்றல் அறக்கட்டளை புதுப்பித்து இன்று பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டன. அறக்கட்டளை நிறுவனர் அசோக் குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

 பேரூராட்சி தலைவர் திரு சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் புனிதவல்லி, வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஆற்றல் அறக்கட்டளையின் அரசு பள்ளி நமது பள்ளி என்ற திட்டத்தில் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 55 பள்ளிகள் இதுவரை புதுப்பிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது இது தவிர 27 கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்திரப்பட்டி கிராமத்தில் மக்களுக்கு  முகாம் அமைத்து உணவு மற்றும் மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post Next Post