மதுக்கடைகளை முறைப்படுத்தக்கோரி சூலூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்


ஆகஸ்ட் 11

சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மதுக்கடைகளை முறைப்படுத்தக்கோரி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை மாவட்ட துணைச் செயலாளர் சூ பெ கருணாநிதி பேசும்போது 

அரசு அறிவித்த நேரம் தவிர்த்து,அரசு அனுமதிக்காத இடங்கள் உள்ளிட்ட டாஸ்மாக் மற்றும் தனியார் மது விற்பனைக் கூடங்களில் 24மணி நேரமும் மது விற்பனையானது நமது சூலூரில் படு ஜோராக நடந்து வருகிறது

இதனால் ஆங்காங்கே அடிக்கடி அடிதடி தகராறுகள், குழு மோதல்கள், குடிப்பவர்களால் சாலை விபத்துக்களில் அநியாயமாக சாலை ஓரமாக நிற்கும் அப்பாவிகள் பலியாதல் போன்ற கொடூரத்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்ற சூழலும் உருவாக அதிகம் வாய்ப்பு உள்ளது 

அதுமட்டுமல்ல இதனால் நடுத்தர மற்றும் கூலித் தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநலம் பாதிப்பதோடு அவர்களை நம்பியிருக்கும் மனைவியும் குழந்தைகளும் நடுத்தெருவுக்கு வரும் சூழல் கொடூரமாக கண்முன்னே காட்சி தரும் போதுதான்,

வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது எதற்காக இந்த அபலை மக்களுக்காக ஏதும் செய்யாமல் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டும் என்று அப்படி துளைத்தெடுத்த கேள்விகளே இப்படி தெருவில் இறங்கி நீதி கேட்க வைத்திருக்கிறது இவ்வளவு தோழமை கட்சிகளையும் இணைக்க வைத்தது ஆதலால் இதை உடனடியாக தடுத்து நிறுத்தி அரசு அறிவித்த விற்பனை நேரங்களில் மட்டுமே மதுபானம் விற்கப்படுவதை 

உறுதி செய்திட, துறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு நில்லாமல் எங்கள் கோரிக்கைகளை நிராகரிக்கப்படும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக குழந்தை மற்றும் ஒட்டுமொத்த குடும்பப் பெண்களையும் அழைத்து வந்து சாலையில் இறங்கி நீதி கேட்போம் என சூலூரைத்தார்,

தொடர்ந்து தோழமை கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்புகள் கலந்து கொண்டு சீரிய கண்டனம் தெரிவித்தனர் 

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, இதே காங்கிரஸ்,சிபிஐ,சிபிஐ(எம்),அமமுக,விசிக,தமுமுக, தபெதிக,திவிக,பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பொதுநல அமைப்புகள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post