கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - உடலை வாங்க மறுத்து மாணவியின் உறவினர்கள் போராட்டம்


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பசுவந்தனை உள்ள சில்லாங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் ‌ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி என்ற மாணவி அதே பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார். 

இந்த மாணவி நேற்று இரவு பள்ளி கழிவறையில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்து வந்த பசுவந்தனை காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து மணியாச்சி ரூரல் டிஎஸ்பி லோகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.


மேலும், பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மாணவி வைத்தீஸ்வரி கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தனது ஊரில் சித்தி ஒருவர் இறந்த துக்க நிகழ்விற்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பியதாக கூறப்படுகிறது.அப்போது இருந்து யாரிடமும், சரிவர பேசமால் இருந்துள்ளார். 

மேலும் கடந்த சில தினங்களாக வைத்தீஸ்வரின் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். நேற்று மாலையில் அதே பள்ளியில் படிக்கும் தனது உறவினர் பெண்ணுடன் பேசும் போது மனமடைந்து காணப்பட்டதாகவும், 


இந்த நிலையில் தான் மாணவி வைத்தீஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்றும், வைத்தீஸ்வரி தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு கடிதம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதப்பட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

மாணவியின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வைத்த பின்னர் தான் முழுவிபரம் தெரிய வரும் என்றும், பள்ளியில் எதுவும் பிரச்சினையை இல்லை ஊருக்கு சென்ற போது அங்கும் எதுவும் பிரச்சினையா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து தங்களுக்கு தெளிவான தகவல் பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுக்கவில்லை என்றும், உடலை வாங்க மாட்டோம் என்று மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


தங்களது மகளின் உடலை தற்போது வரை காட்டவில்லை என மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டு... காவல்துறையினர் கையெழுத்து கேட்டு கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்

பள்ளி வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து திட்டுவதாக  உயிரிழந்த மாணவி பெற்றோரிடம் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்ததாகவும் இந்தாண்டு மட்டும் தானே பள்ளி முடிந்து விடும் பொறுத்து கொள்ளும் படி கூறியதாகவும் தங்களது மகள் மரணத்திற்கு அந்த ஆசிரியர் தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளனர்...

Previous Post Next Post