திருச்செந்தூர் - திமுக கவுன்சிலரை கண்டித்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற லாட்ஜ் உரிமையாளர்.!

 

திருச்செந்தூர் திமுக கவுன்சிலரை கண்டித்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற லாட்ஜ் உரிமையாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வால் சுடலை சகோதரர் ராமகிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில் ஸ்ரீ வேல் லாட்ஜ் என்ற பெயரில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். தங்கும் விடுதி நடத்துவதற்கான உரிமம் மற்றும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி அனைத்தும் முறையாக செலுத்தி நடத்தி வருகிறார. இந்நிலையில், இவருக்கு 5வது வார்டு திமுக கவுன்சிலர் மா. சுதாகர் என்பவர் பாதாள சாக்கடை தொடர்பாக ரூ5 லட்சம் (லஞ்சமாக) கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு ராமகிருஷ்ணன் தர மறுக்கவே நகராட்சி ஆணையரும் உடந்தையாக இருந்து கொண்டு ஏதாவது காரணங்களை கூறி குடிநீர், பாதாள சாக்கடை, மின் இணைப்பு ஆகியவற்றை அடிக்கடி நிறுத்தி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீவேல் லாட்ஜ் உரிமையாளர் ராமகிருஷ்ணனும், அவரது மனைவி சண்முகசுந்தரியும் திருச்செந்தூர் 5-வது வார்டு திமுக கவுன்சிலர் மா சுதாகர் மற்றும் நகராட்சி ஆணையரை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தினர்.

திமுக கட்சியை சேர்ந்த நபரிடமே திமுக கவுன்சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்து, தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.