பிரியா மரணத்திற்க்கு காரணமான எலும்பு சிகிச்சை மருத்துவர் தூத்துக்குடிக்கு இடமாற்றம்.!? - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு!

 

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்து அவரது மரணத்திற்க்கு காரணமான எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் எ.பால்ராம் சங்கர் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து மனுவில் கூறப்பட்டுள்ளதாவது....

சென்னை வியாசர்பாடியை சார்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது 17) கால்பந்து விளையாட்டு வீரராக பள்ளியில் பல போட்டிகளிலும் மாநில அளவில் போட்டிகளிலும் வெற்றிப் பெற்று தேசிய அளவில் பல விளையாடுவதற்கு ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளிப்படிப்பை முடித்து ராணி மேரி கல்லூரியில் உடற்கல்வியியல் துறையில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில் தங்கை பிரியாவுக்கு மூட்டு வலி ஏற்பட்டு உள்ளது. இதையெடுத்து பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூட்டு வலிக்காக அனுமதிக்கப்பட்ட தங்கை பிரியாவுக்கு காலில் அறுவைசிகிச்சை நடைபெற்று இருக்கிறது. அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்னரும் கால் மூட்டு வலி குணமாகாமல் இருந்தே உள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்காக தங்கை பிரியாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள். தங்கை பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்தததில் காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதை கண்டறிந்துள்ளனர். இதனால் தான் தொடர்ந்து வலி இருக்கிறது என்றும், காலை அகற்ற வேண்டும் இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் தங்கை பிரியாவின் கால் பகுதியை அகற்ற தங்கை பிரியாவும் அவரது பெற்றோர்களும் அனுமதித்துள்ளனர்.

இப்படிப்பட்ட பரிதாபகரமான சூழ்நிலையில் தங்கை பிரியாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தே இருந்துள்ளது. காணப்பட்டது. தங்கை பிரியாவுக்கு ராஜிவ்காந்து அரசு மருத்துவமனை நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று 15.11.2022 காலை நேரம் 7.15 மணிக்கு தங்கை பிரியா மரணம் அடைந்துவிட்டார்.

இப்படிப்பட்ட கொடுமையான வலி நிறைந்த மரணத்திற்கு முதலில் தங்கை பிரியா அனுமதிக்கப்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனை எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.பால்ராம் சங்கரும், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் சோமசுந்தரம் அவர்கள் இரண்டு பேரும்தான் காரணம் என்று தங்கை பிரியாவின் பெற்றோர்களும், அதை தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் தெள்ள தெளிவாக கூறியுள்ளது. இந்த நிலையில் தங்கை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்து சாவுக்கு காரணமான எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் எ.பால்ராம் சங்கர் தூத்துக்குடிக்கும், டாக்டர் சோமசுந்தரம் விருதுநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலையும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. டாக்டர் பால்ராம் சங்கர் என்பவரின் இடமாற்றம் என்பது தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை என்று 16.11.2022 தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிக்கை செய்தி மூலமாக தெரிந்து கொண்டோம்.

இந்த இடமாற்றத்தின் செய்தி தூத்துக்குடி மக்களிடையே பதட்டத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பால்ராம் சங்கரை பணி செய்ய அனுமதிக்ககூடாது என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.   

Ahamed

Senior Journalist

Previous Post Next Post