நண்பர் உயிரிழந்த சோகத்தில் பஸ் முன் பாய்ந்து உயிரை விட்ட ஓட்டல் கேஷியர்!

திருப்பூரில் நண்பர் உயிரிழந்த சோகத்தில் 75 வயதான ஓட்டல் கேஷியர் ஓடும் பஸ்ஸில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாநகரில் ஊத்துக்குளி ரோடு மன்னரை பகுதியை சேர்ந்தவர் தம்பி சுப்பிரமணியம் (வயது 72). இவர் மண்ணறையில் ரேவதி தியேட்டர் என்ற தியேட்டர் நடத்தி வந்தார். 

மேலும் அதிமுக கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி உமா மகேஸ்வரி திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவரது நெருங்கிய நண்பரான இன்னொரு சுப்ரமணியம் அதே பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் மரகதம். இவரது இரு மகள்களுக்ககும் திருமணமாகி விட்டது. 

சுப்பிரமணியம் திருப்பூர் பிரேமா ஓட்டலில் கேசியராக பணியாற்றி வந்தார். 

ரேவதி தியேட்டர் உரிமையாளர் தம்பி சுப்பிரமணியமும், ஹோட்டல் கேசியர் சுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்கள். இருவரும் காலையில் வாக்கிங் செல்வது முதல் தங்களது வாழ்வில் நடக்கின்ற நல்ல விஷயம் கெட்ட விஷயம் என அனைத்தையும் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

சிறு வயது முதல் இணைபிரியாத நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தம்பி சுப்பிரமணியம் கடந்த மாதத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். இது ஹோட்டல் கேஸியர் சுப்பிரமணியத்துக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தனது உயிர் தோழன் மறைவு பற்றி பேசி அழுது இருக்கிறார். தொடர்ந்து வருத்தத்திலேயே இருந்து வந்த அவர், உடல் இளைத்து போய் துரும்பாக மாறிவிட்டார்.

இந்த நிலையில் இன்று காலை திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் வாக்கிங் சென்றபோது திடீரென்று அந்த வழியாக வந்த தனியார் பஸ்ஸில் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான சிசிடிவி கட்சி வைரலாகி திருப்பூரில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த சிசிடிவி காட்சியில் சுப்பிரமணியம் சாலையை கடப்பது போல வந்து பஸ்ஸின் குறுக்கே பாய்ந்து உயிர் விட்டு உள்ளார்.

இந்த சம்பவம் பற்றி திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நண்பர் மரணமடைந்த சோகம் தாழாமல் ஓட்டல் கேசியர்  தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்ட சம்பவம் திருப்பூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post