தூத்துக்குடி: முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் - ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் கைது.!

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். மதுபோதையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக விசாரணையில் தகவல்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.15 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு ரயில் நிலையத்தில் இருந்த வெடிகுண்டு பெட்டி வெடிக்கும் என்று கூறி விட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார்.

உடனடியாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசாரம் சேர்ந்து அந்த மர்ம நபர் வெடி குண்டு இருக்கும் இடத்தை போனில் சொன்னது போல் தேடினார்கள். மேலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். 


போனில் பேசிய அந்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்க்கால் கிராமத்தில் இருந்து அந்த போன் வந்தது தெரியவந்தது. உடனடியாக குரும்பூர் காவல் நிலைய போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று போனில் பேசிய மணி மகன் கணேசமூர்த்தி (42) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில்   மதுபோதையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post