அடிடாஸ் அர்ஜென்டினா 3-ஸ்டார் கிட் : சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த அர்ஜென்டினா ஜெர்சி - அடிடாஸ் Show Room - ல் வரிசை கட்டிய மக்கள்.!

 

சில நாட்களுக்கு முன்பு அடிடாஸ் அறிவித்தபடி, அடிடாஸ் அர்ஜென்டினா 3-ஸ்டார் ஹோம் ஜெர்சி டிசம்பர் 26, 2022 அன்று அடிடாஸின் அர்ஜென்டினா இணையதளத்தில் விற்பனைக்கு வந்தது . சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டது.

2022 கத்தாரில் நடந்து முடிந்த  #FifaWorldCup-ஐ வென்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியின் புதிய மூன்று நட்சத்திர ஜெர்சியை வாங்க மக்கள் தலைநகர் புவெனஸ் அயர்ஸ்ல் மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

அடிடாஸ் உறுப்பினர் திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களுக்கான ஆன்லைன் ஆர்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றாலும், 2022 கத்தாரில் நடந்த #FifaWorldCup-ஐ வென்ற பிறகு, அர்ஜென்டினாவின் புதிய மூன்று நட்சத்திர ஜெர்சியை வாங்க மக்கள் அடிடாஸ் கடையில் ஆர்வத்துடன் அலைமோதும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அர்ஜென்டினா பிரான்சை வீழ்த்தி 2022 உலகக் கோப்பையை கத்தாரில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் வென்றது, இது போட்டி வரலாற்றில் மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டிகளில் ஒன்றாகும். மெஸ்ஸி, தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடி, இரண்டு முறை கோல் அடித்து, ஆட்டத்தில் ஒரு ஜாம்பவான் என்ற இடத்தை மேலும் உறுதிப்படுத்தினார்.

மெஸ்ஸியின் அடிடாஸ் ஜெர்சிகள் ஆட்டத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டன. அடிடாஸின் இணையதளத் தேடுதலில், அர்ஜென்டினா ஜெர்சிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கடந்த வாரம் காட்டியது,

அமேசானில் மெஸ்ஸி அர்ஜென்டினா ஜெர்சிகளைத் தேடினால் அவை விற்றுத் தீர்ந்துவிட்டதாக காட்டின. ஒரு பிரபலமான மறுவிற்பனையாளர் வலைத்தளம், சில ஜெர்சிகளை $500 அமெரிக்க டாலர்கள் வரை விற்கிறது. இருப்பினும், அவரது ஐரோப்பிய கிளப்பான பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனின் மெஸ்ஸி ஜெர்சிகள் ஆன்லைனில் பெருமளவில் கிடைக்கின்றன.

இதன் அடுத்த தொகுப்பு ஏப்ரல் 2023ல் தான் கிடைக்கும் என அடிடாஸ் தெரிவித்துள்ளது, மெஸ்ஸியின் ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post