தூத்துக்குடி : காதல் திருமணம் செய்த தம்பதியர் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை.! - திருமணம் முடிந்த 3 மாதங்களில் விபரீத முடிவு.!

 

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே உள்ள அனைந்தமாடன் பச்சேரியைச் சேர்ந்தவர் தங்க முனியசாமி (30). இவரது மனைவி சீதா (25). இருவரும் காதலித்து கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில் இன்று காலை வெகுநேரம் ஆகியும் தங்க முனியசாமியின் வீடு பூட்டியே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தம்பதியர் இருவரும் வீட்டில் உள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தருவைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களை கைப்பற்றி  பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 3 மாதங்களை ஆவதால் தூத்துக்குடி சார் ஆட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்

திருமணம் முடிந்த நாள் முதல் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். நேற்று இரவு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருமே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Ahamed

Senior Journalist

Previous Post Next Post