தூத்துக்குடியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம்; 100க்கும் மேற்பட்டோர் கைது!.

 

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பாக மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தூத்துக்குடி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தனலெட்சுமி தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கரும்பன் முன்னிலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானம், ஆட்டோ நல வாரியம் போன்ற பிற அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்கு நல நிதி வசூலிக்க திட்டமிட வேண்டும். உப்பு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்திட வேண்டும். தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை கைவிட வேண்டும் மற்றும் பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post