தூத்துக்குடி மாவட்டத்தில் பறவை காய்ச்சல்? செத்து விழும் கோழி, காக்கைகளால் பொதுமக்கள் பீதி.! - கால்நடை துறை நோய் சிகிச்சை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!!

 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் பேட்மாநகரம், பத்மநாபமங்கலம் பகுதிகளில் மர்ம நோய் தாக்குதலில் நூற்றுக்கணக்கான கோழிகளும், காக்கைகளும் செத்து மடிந்தன. ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மர்ம நோய் தாக்குதலுக்கு கோழிகள், வான்கோழிகள், காக்கை உள்ளிட்ட பறவைகள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பலியானது.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் தலைமையிலான பணியாளர்கள், நோய் தாக்குதலுக்கு ஆளான பறவைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் தூத் துக்குடி மாவட்ட கால்நடைகள் நோய் புலனாய்வு பிரிவு மூலம் இறந்த கோழிகளை பிரேத பரிசோதனை செய்து பறவைகள் இறப்பதற்கான காரணம் கண்ட றிவதற்கான ஆய்வுக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் புதுக்குடி பகுதியில் நேற்றும் கோழிகள் செத்து விழுந்தன. காக்கைகள் உள்ளிட்ட சில பறவைகளும், அணில்களும் செத்து மடிந்தன. தகவலறிந்த கால்நடை துறை நோய் சிகிச்சை சிறப்பு இயக்குநர் சங்கரநாராய ணன் தலைமையில் ஸ்ரீவை. கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் நோய் தாக்குதலுக்குள்ளான கோழிகளின் இரத்த மாதிரியை சேகரித்தனர். இந்த ரத்த மாதிரிகள், சென்னையில் உள்ள கால்நடை துறை நோய் நிகழாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஸ்ரீவைகுண் டம், புதுக்குடி பகுதியில் இறந்த வான்கோழியை கால்நடை துறையினர் போபாலில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்க்கு சில நாட்களுக்கு முன்பு எடுத்து சென்றனர். ஒரு வாரத்தில் ஆராய்ச்சி முடிவு தெரியும் என கூறினர். ஆனால் நேற்றும் அடுத்தடுத்து கோழிகள் மடிந்துள்ளன. கால்நடை துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்த கோழியும் இறந்துள்ளது. இதனால் கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கேர ளாவில் பறவை காய்ச்சல் பரவல் உள்ள நிலையில், எங்கள் பகுதியிலும் பரவியி ருப்பதாக வதந்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பறவைகள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பறவைகளின் உயிரிழப்பு தொடருவதால் பீதியடைந்துள்ள கிராம மக்கள், உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். காக்கைகளும் அடுத்தடுத்து மடிவதால் வனத்துறையினரும், சுகாதார துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post