கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் இலக்கியப் பெருவிழா - திருச்சி சிவா MP சிறப்புரை.!

 

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் தருமபுரி கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் நா.ராமலட்சுமி முன்னிலையில்,   கல்லூரி முதல்வர் முனைவர்.வி.அனுராதா தலைமையில்  இலக்கியப் பெருவிழா நடைபெற்றது.

எதிர்காலம் யார் கையில் ? என்கின்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவைஉறுப்பினர் திருச்சி சிவா மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர். 

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட அவைத் தலைவர் துணை செயலாளர்கள், மாவட்ட பொருளாளர்,  தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,  ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழ, ஒன்றிய குழு, பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்,  கவுன்சிலர்கள்,  அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.