நீதிபதி விக்டோரியா கௌரிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!- உச்ச நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு

 

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவியேற்பு விழா காலை 10.35 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்ததால், மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் முன்கூட்டியே விசாரணையை கோரினர்.  நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுக்கள் முதலில் எண் 38 ஆக பட்டியலிடப்பட்டன.

இந்த வழக்கு காலை 9.15 மணிக்கு முதல் நீதிமன்றத்தில் (CJI பெஞ்ச்) விசாரிக்கப்படும் என்று வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  வழக்கறிஞர்கள் அங்கு திரண்டதால், 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என, மூன்று இருக்கைகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது.

ஏறக்குறைய 30 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, நீதிபதிகள் சனிஜ்வ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு 7வது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்று வழக்கறிஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது.  கௌரியை நியமனம் செய்ய கொலீஜியம் ஆலோசனை நடத்தியதால், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சுந்திரேஷ் விலகினார்.  விசாரணை நேரம் குறித்து எந்த தெளிவும் இல்லை.  பின்னர், இந்த வழக்கை சிறப்பு அமர்வு காலை 10.30 மணிக்கு விசாரிக்கும் என்று பட்டியல் வெளியிடப்பட்டது.  விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், கவுரி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சில நிமிடங்களில் கவுரியின் நியமனத்துக்கு எதிரான மனுக்களை டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. 

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

"அரசியல் பின்னணியில் இருந்து பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், விக்டோரியா கௌரி கூடுதல் நீதிபதியாகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார். நிரந்தரம் செய்யப்படவில்லை. நடவடிக்கை எடுக்குமாறு கொலீஜியத்துக்கு எங்களால் உத்தரவிட முடியாது” எனக் கூறி நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்தனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கணிய ல் நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்றார்!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post