மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்... நடுரோட்டில் மருமகனை வெட்டிச்சாய்த்த மாமனார்... வைரலாகும் பரபரப்பு வீடியோ


கிருஷ்ணகிரி மாவட்டtத்தில் உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 27).  இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். 

ஜெகன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கிருஷ்ணகிரி,  அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கரின் மகள் சரண்யாவை    காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது  காதல் திருமணம்  பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அதனால் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்

இப்படி இருக்கும் போது, இன்று மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து  டேம் ரோடு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஜெகனின் மாமனாரான சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் ஜெகனை தடுத்தனர். அவரை தாக்கி கீழே தள்ளி மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவனது கழுத்தை  அறுத்தனர்.

மேலும் கீழே கிடக்கும் ஜெகனை தாறுமாறாக கத்தியில் வெட்டினார்கள். இதை அந்த வழியே சென்றவர்கள் வீடியோ பதிவு செய்தனர்.

வெட்டுக்காயம் பட்ட ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஜெகனின் உடலை எடுக்க விடாமல் பொதுமக்களும் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இதனால் கிருஷ்ணகிரி தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி காவல்துறை துணை  கண்காணிப்பாளர் தமிழரசி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சராஜ் குமார், தாகூர்  சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து உறவினரிடம் சமாதானமாக பேசினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து  சென்றனர்.

 இதைத்தொடர்ந்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த சம்பவத்தால் டேம் ரோடு பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த கொலைச்சம்பவம் நடந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. 

Previous Post Next Post