எடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி மலர அயராது பாடுபட வேண்டும்... முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு  நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம்  கோல்டன் நகர் பகுதி கழகம் அம்பேத்கர் நகர் ரயில்வே கேட் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன், தலைமை கழக பேச்சாளர் கோவை புரட்சித்தம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார்,   முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச்செயலாளரும், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமானசி.சிவசாமி, திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன் தலைமை தாங்கினார். 

இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது: 
நடைபெற்றுக் கொண்டிருந்த திமுக ஆட்சி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த ஆட்சியாக விளங்குகிறது, பல்வேறு வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்த திமுக தற்போது வரை பொதுமக்களுக்கு எந்த ஒரு வாக்குறுதியையும் கொடுக்கவில்லை, மேலும் மறைந்த முதல்வர் டாக்டர்.ஜெ.ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், திருமண உதவி திட்டம் என அனைத்தையும் இந்த ஆட்சி ரத்து செய்துள்ளது, 14 வகையான நலத்திட்ட உதவிகளையும் இந்த ஆட்சி ரத்து செய்துள்ளது. இந்த ஆட்சி சொன்னதையும் செய்யவில்லை அம்மா கொண்டு வந்த திட்டங்களையும் ரத்து செய்துள்ளனர். இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் திருப்பூர் மாநகர மக்கள் வருங்காலத்தில் ஒற்றுமையாக ஒன்று திரண்டு அம்மா ஆட்சி மற்றும் எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் அண்ணன் எடப்பாடி யார் தலைமையில் அமைய நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் 
இந்த கூட்டத்த்தில்  மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டிபாலு ,பொதுக்குழு உறுப்பினர்கள்  முருகசாமி,   தம்பிமனோகரன்,தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான  அன்பகம் திருப்பதி, வாலிபாளையம் பகுதி கழக செயலாளர் கேசவன்,நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் பட்டு லிங்கம்,காந்திநகர் பகுதி கழக செயலாளர் கருணாகரன்,கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் பி.கே.எம்.முத்து,  வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர்  சுப்பிரமணியம்,  மாவட்ட மகளிரணி செயலாளர்  சுந்தராம்பாள்,மாவட்ட விவசாய அணி செயலாளர்  கலைமகள் கோபால்சாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேஷ், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர்  ரத்தினகுமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்  பிரேம்குமார்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற  இணைச் செயலாளர்கள் தாமோதரன், தனபால்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்  நீதிராஜன், வார்டு செயலாளர்  பழனிச்சாமி,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்  ரங்கசாமி,  கனகராஜ்,  ஷாஜகான், உள்பட பலர் பங்கேற்றனர். 
Previous Post Next Post