சுற்றுலா சென்று வந்த போது பரிதாபம்... சாலை விபத்தில் 7 பெண்கள் பலி

இன்பச் சுற்றுலா சென்று வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓணான் குட்டை பகுதியை சேர்ந்த  45க்கும் மேற்பட்டோர் கடந்த 8 ஆம் தேதி ஓணான் குட்டை பகுதியில் இருந்து தர்மஸ்தாலா கோவிலுக்கு இன்பச் சுற்றுலா சென்றனர்.

அவர்கள் அங்கிருந்து இன்று காலை வீடு திரும்பிய நிலையில் அவர்களில் சுமார் 19 பேர் வந்த மினி பஸ் அதிகாலை 3 மணி அளவில் பஞ்சர் ஆகியுள்ளது. அதன் காரணமாக மினி பஸ்ஸில் இருந்த பெண்கள் சண்டியூர் பகுதியில் இருந்த தேசிய நெடுஞ்சாலையில் நடுவே உள்ள சென்டர் மீடியத்தில் அமர்ந்திருந்தனர்.

அப்போது பஞ்சர் ஆன மினிபஸ் தேசிய நெடுஞ்சாலையில் நின்று இருந்ததால் அதி வேகமாக வந்த பின்னே வந்த ஈச்சர் வேன் மினி பஸ் மீது மோதியது. இதில் சென்டர் மீடியத்தில் அமர்ந்திருந்த பெண்கள் மீது மினி பஸ் விழுந்தது. மினி பஸ் விழுந்ததில் நசுங்கி சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் உயிரிழந்தனர்.

 சம்பவ இடத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் மற்றும் வாணியம்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் உட்பட 10ககும் மேற்பட்ட போலீசார் சம்பவத்திற்கு வந்து உயிரிழந்த பெண்களின் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- வெங்கடேசன்

Previous Post Next Post