ராஷ்ட்ரிய இந்து மகா சபா அமைப்பின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராஷ்ட்ரிய இந்து மகா சபா  அமைப்பின் மாநிலத் தலைவர்  வேலுச்சாமி  கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனது நிர்வாகிகளுடன்  மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் கோவையில்  இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யுமாறு கூறிவரும் இஸ்லாமிய அமைப்புக்களை கண்டித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டி எனது மனு 
நான் மேற்படி இயக்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவராக தேச மற்றும் தெய்வீக பணி செய்து வருகிறேன்.கடந்த சில மாதங்களாக செய்திகளிலும் சமூக வலைத்தளம் போன்ற ஊடகங்களிலும் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டி சில இஸ்லாமிய அமைப்புகள் சிறை முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதாக அறிய முடிகிறது.
மேலும் தமிழக அரசு இந்த விவகாரத்தை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி ஆளுநர் திருப்பி அனுப்பியதாகவும் அறிய முடிகிறது.அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை திட்டமிட்டே சில இஸ்லாமிய அமைப்புகள் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பேரறிஞர்அண்ணா பிறந்தநாளை வருவதாகவும் அறிகிறோம்
 அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யக் கோரி
 வருகின்றனர் மேலும் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்கிறோம் என சில அமைச்சர்கள் சில இடங்களில் வாக்குறுதி அளித்து செல்வதையும் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.
ஆகவே தாங்கள் இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்ய ஆவண செய்யுமாறு இதன் மூலம்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் உடன் மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
Previous Post Next Post