சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகம் இவ்உணவகம் பல்வேறு ஏழை எளிய மக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் பயன் அடைந்து வருகின்ற இந்நிலையில் அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது சாலையில் செல்வதால் இப்பகுதியில் நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் பந்தலூர் அரசு மருத்துவமனை இங்கு அமைந்துள்ளதால் தினமும் இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சாலையில் வழிந்தோடி ஆட்டோ ஸ்டாண்ட் வழியாக பழைய பேருந்து நிலையம் சென்று கழிவு நீர் கால்வாய்யில் கலப்பதால் இப்பகுதியில் கடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது மேலும் துர்நாற்றம் வீசுகிறது கழிவுநீர் கால்வாயை சரிவர தூர் வாராதது கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது ஆகவே  மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Previous Post Next Post